உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வீடியோவால் சஸ்பெண்ட் போலீஸ்காரர் தற்கொலை

வீடியோவால் சஸ்பெண்ட் போலீஸ்காரர் தற்கொலை

பவானி: ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள ஊமாரெட்டியூரை சேர்ந்தவர் செல்வக்குமார், 32, அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷன் இரண்டாம் நிலை காவலர். அம்மாபேட்டை அருகேயுள்ள சின்னப்பள்ளம் செக்போஸ்டில் கடந்த, 2ம் தேதி இரவு, செல்வக்குமார் பணியில் இருந்தார். அப்போது, வாழைக்காய் லோடு ஏற்றிச் சென்ற வேன் டிரைவரிடம், குடிபோதையில் பணம் கேட்டு மிரட்டியதாக, போலீஸ்காரர் மீது புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோ பரவியது. பவானி டி.எஸ்.பி., சந்திரசேகரன் விசாரணை அடிப்படையில், செல்வக்குமாரை நான்கு நாட்களுக்கு முன் சஸ்பெண்ட் செய்து, எஸ்.பி., ஜவஹர் உத்தரவிட்டார். இந்நிலையில், செல்வக்குமார் நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், அதிர்ச்சி அடைந்த அவரின் உறவினர்கள், போலீஸ்காரர் செல்வக்குமாருடன் வாக்குவாதம் செய்த வீடியோவை பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று மதியம் சாலை மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறவே, கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை