உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குறைந்தபட்ச ஊதியம் வலியுறுத்தி தொழிலாளர் துறையுடன் பேச்சு

குறைந்தபட்ச ஊதியம் வலியுறுத்தி தொழிலாளர் துறையுடன் பேச்சு

ஈரோடு, டிச. 25--ஈரோடு மாவட்ட உள்ளாட்சி துறை பணியாளர்களுக்கு, அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியம் வழங்குதல் உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, தொழிலாளர் நலத்துறையுடன், தொழிற்சங்கத்தினர் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடந்தது.தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்) திருஞானசம்பந்தம் முன்னிலையில் ஈரோடு மாவட்ட உள்ளாட்சி துறை பணியாளர் சங்கம் ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகிகள் சின்னசாமி, மணியன், ரவி, நகராட்சிகள், டவுன் பஞ்.,கள், பஞ்.,களின் அதிகாரிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடந்தது. துணை ஆணையர் தனலட்சுமி, ஈரோடு நகர் நல அலுவலர் கார்த்திகேயன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.கலெக்டர் நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை கடந்த ஏப்., 1 முதல் முன்தேதியிட்டு வழங்க வேண்டும். அதுபோல ஓட்டுனர்கள், குடிநீர் வினியோக பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கும் குறைந்த பட்ச ஊதியம் தர வேண்டும். ஈரோடு மாநகராட்சி உட்பட உள்ளாட்சிகளில் தொழிலாளர்களுக்கு பி.எப்., - இ.எஸ்.ஐ., திட்டத்தை அமலாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை