உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 11.25 லட்சம் பனை விதைகள் அக்.,15க்குள் நடுவதற்கு இலக்கு

11.25 லட்சம் பனை விதைகள் அக்.,15க்குள் நடுவதற்கு இலக்கு

ஈரோடு, பனை விதைகள் நடவு இயக்கம் குறித்த கலந்தாலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்து பேசியதாவது:தமிழக அரசு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை தலைமையிலும், மாவட்ட நிர்வாகத்துடன், தன்னார்வலர் இணைந்து தமிழ்நாடு விதை நடவு இயக்கத்தை செயல்படுத்தி, 38 மாவட்டங்களில், 44.90 லட்சம் பனை விதைகளை நடவு செய்து, உதவி செயலி மூலம் புவியியல் அடையாளத்துடன் பதிவேற்றியது.தொடர்ச்சியாக, கடந்த, 16 முதல் அக்., 15 வரை மாநில அளவில், 6 கோடி பனை விதைகளை கொண்டு நீர் நிலைகள், கடலோர பகுதி, காலியாக உள்ள நிலப்பரப்பு, பனைங்காடுகள் உருவாக்கும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளது. மாநில அளவில், 12,620 பஞ்.,களிலும் தலா, 5,000 விதைகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தலா, 20 விதைகள், அரசு துறைகள் தலா, 20 விதைகள், தன்னார்வ அமைப்புகள் தலா, 1,000 விதைகள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உதவி செயலி மூலம் பதிவேற்றி, பசுமை குழு கூட்டம் நடத்தி செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில், 11.25 லட்சம் பனை விதை நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நேற்று முதல் விதை சேகரிக்கப்பட்டு அக்.,15க்குள் நடவு செய்யும் பணி நிறைவு பெறும். இவ்வாறு பேசினார்,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை