உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்ஈரோடு, நவ. 22-ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன், ஆசிரியர்கள் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை அரசு இயற்ற வேண்டும். பள்ளிகளில் காவலர்களை நியமிக்க வேண்டும். சினிமா படங்களில் இடம் பெறும் வன்முறை காட்சிகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். டிட்டோ ஜாக் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் நேரு தலைமை வகித்தார். முதுகலை, பட்டதாரி, இடைநிலை, துவக்க பள்ளி ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி