மேலும் செய்திகள்
பாட்டு கச்சேரியில் மோதல் தீ வைத்து பைக் எரிப்பு
04-Sep-2024
ஈரோடு: ஈரோடு, பெரியசேமூர், எல்லப்பாளையம் சாலை, கொங்கு வேலன் நகரை சேர்ந்த சூர்யா மகன் ஆத்மநாபன், 22; பெரியசேமூர், மாரியம்மன் கோவில் வீதி சஞ்சய், 20; ஈரோடு கே.ஜி.,பாளையத்தை சேர்ந்த நாகூர் மொய்தீன், 31, ஆகியோர் பல்சர் பைக்கில் சென்றனர். ஆத்மநாபன் பைக்கை ஓட்டினார். வடுகபட்டி-எல்லகடை சாலையில் எதிரே வந்த பைக் மீது மோதாமல் இருக்க திடீர் பிரேக் போட்டபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கருங்கல்லில் மோதி, வாய்க்காலில் மூவரும் பைக்குடன் விழுந்தனர். பலத்த காயமடைந்த மூவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஆத்மநாபன் செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
04-Sep-2024