உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நீதிமன்றத்தில் இடையூறு வாலிபர் சிறையில் அடைப்பு

நீதிமன்றத்தில் இடையூறு வாலிபர் சிறையில் அடைப்பு

ஈரோடு, ஈரோட்டில், நீதிமன்ற நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஈரோடு, சூரம்பட்டிவலசு ஸ்டாலின் வீதியை சேர்ந்த சூர்யா மகன் சீனிவாசன், 26. ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷனில் பதிவான குற்ற வழக்கில் ஆஜராக, நேற்று முன்தினம் ஈரோடு குற்றவியல் நீதிமன்ற எண்.2 பகுதிக்கு வெளியே நின்று இருந்தார். அப்போது பிற வழக்குகள் குறித்த விசாரணை நடந்தது. மதுபோதையில் இருந்த சீனிவாசன், திடீரென அங்கிருந்த சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து, சிறுநீர் கழித்த பின் மீண்டும் சுற்றுச்சுவர் மீது ஏறி வந்தார். நீதிமன்ற மாண்புகளை அவமதிக்கும் விதமாகவும், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுக்கும்படி நடந்து கொண்டதாக ஈரோடு குற்றவியல் நீதிமன்ற எண்.2 எழுத்தர் கோவிந்தன், வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சீனிவாசனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி, கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.பள்ளி மாணவ, மாணவியருக்கு தடுப்பூசி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை