உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கட்டுமான பணியில் இடிந்து விழுந்த கோவில் மண்டபம்

கட்டுமான பணியில் இடிந்து விழுந்த கோவில் மண்டபம்

ஈரோடு, ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே கந்தசாமிபாளையத்தில், 400 ஆண்டு பழமையான சடையப்ப சுவாமி கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலில், 3.80 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி நடந்து வருகிறது.இதன்படி மூலவர் சன்னதி முன்புறம் கல் மண்டபம் கட்டும் பணி நடக்கிறது.நேற்று காலை இந்த கல் மண்டபம் திடீரென இடிந்து விழுந்தது. சிவகிரி போலீசார், இந்து சமய அறநிலையத்துறையினர் விசாரணை நடத்தினர். திருப்பணி நடக்கும் நிலையில் கல் மண்டபம் இடிந்து விழுந்தது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை