உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அந்தியூர் அருகே 8 மாதங்களுக்கு பிறகு ஏலம் விட்ட கோவில் நிலம் ஒப்படைப்பு

அந்தியூர் அருகே 8 மாதங்களுக்கு பிறகு ஏலம் விட்ட கோவில் நிலம் ஒப்படைப்பு

அந்தியூர், ஜன. 4-அந்தியூர் அருகே வேம்பத்தி பஞ்., தோட்டக்குடியாம்பாளையம், வேதநாயகி ஈஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 11 ஏக்கர் விவசாய நிலம் மக்கள் முன்னிலையில், அறநிலையத்துறை அதிகாரிகள், எட்டு மாதங்களுக்கு முன் ஏலம் விட்டனர். பச்சாக்கவுண்டர், 4.24 ஏக்கர் நிலத்தை, 1.70 லட்சம் ரூபாய்க்கு ஓராண்டு காலம் ஓட்டுவதற்கு பணம் கட்டி ஏலம் எடுத்தார். அதேசமயம் இவருக்கு முன்னதாக நிலத்தை ஏலம் எடுத்தவர்கள், பயிர் சாகுபடி செய்திருந்தனர்.இதனால் அறுவடை வரை அவகாசம் கேட்டனர். அதேசமயம் ஏலம் எடுத்த பச்சாக்கவுண்டர், நாட்கள் அதிகமாவதால், நிலத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு, அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் உள்ள அறநிலையத்துறையினரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து அறநிலையத்துறை அதிகாரிகள், ஆப்பக்கூடல் போலீசாருடன் நேற்று சென்றனர்.விவசாய நிலத்தை முறையாக அளந்து, பொக்லைன் இயந்திர உதவியுடன் இடத்தை சுத்தம் செய்து, டிராக்டர் கொண்டு நிலத்தை முழுவதும் உழுது, ஏலம் எடுத்த பச்சாக்கவுண்டரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை