மேலும் செய்திகள்
டோல்கேட் முற்றுகை: விவசாயிகள் போராட்டம்
04-Jan-2025
டி.என்.பாளையம்:ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் அருகேயுள்ள குண்டேரிப்பள்ளம் அணை அருகில், 2018ல் விவசாய நிலத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, 6 கி.மீ., தொலைவில் ஆறு விவசாயிகளுக்கு சொந்தமான, 50 ஏக்கர் விவசாய நிலத்துக்கு குழாய் அமைத்து தண்ணீர் கொண்டு செல்ல முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த, 10 கிராம மக்கள் போராடினர்.இரு ஆண்டுகளுக்கு முன் நீதிமன்ற உத்தரவு பெற்று, குழாய் அமைக்க விவசாயிகள் முயன்றனர். அதுவும் கிராம மக்களின் தொடர் போராட்டத்தால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று, போலீஸ் பாதுகாப்புடன் குழாய் அமைக்கும் பணியில், விவசாயிகள் நேற்று ஈடுபட்டனர். இதையறிந்து, 200க்கும் மேற்பட்ட கொங்கர்பாளையம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தாலுகா அலுவலக வளாகத்தில் இரவில் சமைத்தும், துாங்கியும் போராட்டத்தை இரண்டாவது நாளாக நேற்று தொடர்ந்தனர். 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். கிராம மக்களின் எதிர்ப்பை மீறி, ஏழு ஜே.சி.பி., இயந்திரங்கள் மூலமாக குழாய் அமைக்கும் பணி தொடங்கியது.
04-Jan-2025