உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விளிம்பு நிலை தொழிலாளர்களை குறிவைத்து நடந்த ஜவுளி விற்பனை

விளிம்பு நிலை தொழிலாளர்களை குறிவைத்து நடந்த ஜவுளி விற்பனை

ஈரோடு, ஈரோடு மாநகரில் ப.செ.,பார்க், மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, டி.வி.எஸ்.வீதி உள்ளிட்ட இடங்கள் ஜவுளிக்கடைகள் நிறைந்த பகுதி. இங்கு மொத்தம், சில்லறை விற்பனையில் துணி விற்கப்படுவதால் வியாபாரிகள் மட்டுமின்றி மக்களும் அதிகம் வருவர். தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனிடையே தற்காலிக கடைகள் அமைப்பு, மழையால் வியாபாரம் பாதித்ததாக வியாபாரிகள் தெரிவித்திருந்தனர். இருப்பினும் தொடந்து புத்தாடை வாங்க மக்கள் வந்ததால் வியாபாரம் களை கட்டியது. தீபாவளி நேற்று காலை ஆரம்பமான நிலையிலும், சாலையோர கடைகளில் வியாபாரம் களைகட்டியது.இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: கடை, நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், போனஸ் பெறும் நாளில் துணி வாங்கி செல்வர். இதேபோல் சீசன் கடைகளில் பணியாற்றுபவர், தினக்கூலி தொழிலாளிகள் தீபாவளி அன்று காலை வரை வேலை செய்வார்கள். பின் சம்பளம் பெற்றுக்கொண்டு துணி வாங்குவார்கள். அவர்களை குறிவைத்தே தீபாவளி நாளில் ஜவுளி விற்பனை செய்கிறோம். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ