உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அட்டை கடைகளால் தொல்லை ஜவுளி வியாபாரிகள் வேதனை

அட்டை கடைகளால் தொல்லை ஜவுளி வியாபாரிகள் வேதனை

ஈரோடு ப.செ.பார்க் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான அப்துல் கனி ஜவுளி மார்க்கெட் வணிக வளாகம் உள்ளது. இங்கு, 64 கடைகள் மட்டுமே ஏலம் போனது. மீதி, 169 கடைகள் காலியாக உள்ளது. இந்நிலையில் வளாகத்தில் தனியாக அட்டை கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதால், வியாபாரம் பாதிப்பதாக ஜவுளி வியாபாரிகள் மனு அளித்தனர்.மனு விபரம்: நிரந்தர கடைகளை தவிர, 10க்கும் மேற்பட்பட அட்டை கடை அமைத்துள்ளனர். இதனால் எங்களது வியாபாரம் பாதிக்கிறது. பொது ஏலத்தின் மூலம் கடைகள் எடுக்கும் போது, இதுபோன்ற கடைகள் இல்லை. இதுகுறித்து ஓராண்டுக்கு மேலாக புகார் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த கடைகளால் தான், மற்ற கடைகள் ஏலம் போகாமல் உள்ளது. இவர்களை காலியாக உள்ள கடைகளுக்காவது மாற்ற வேண்டும். இனியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். கமிஷனர் அர்பித் ஜெயின், நேரில் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி