பீரோவில் இருந்த 3 பவுன் மாயம்
தாராபுரம் குண்டடத்தை அடுத்த காணிக்கம்பட்டியை சேர்ந்தவர் சவுந்தரராஜன், 40. கூலித் தொழிலாளியான இவரது வீட்டில் கடந்த, 26ல், பீரோவில் இருந்த 2 பவுன் செயின் மற்றும் மோதிரம் கம்மல் உள்பட 3 பவுன் நகைகள் மாயமானது. வீட்டு பீரோ உடைக்கப்படாமல், நகை திருட்டு போனதால், அடிக்கடி வந்து செல்லும் நபரின் கை வரிசையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.