உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொடக்க கல்வி துறையில் முறைகேடு நிர்வாக மாறுதலை ரத்து செய்யணும்

தொடக்க கல்வி துறையில் முறைகேடு நிர்வாக மாறுதலை ரத்து செய்யணும்

'ஈரோடு, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் விக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாநில பொது குழு உறுப்பினர்கள் சண்முக சுந்தரம், ஜோசப் பாஸ்டர், ராஜா முன்னிலை வகித்தனர். மாவட்டசெயலாளர் சண்முகம் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.தொடக்க கல்வி துறையில் இந்தாண்டுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வை அறிவித்த பின் நிர்வாக மாறுதல் என்று விதிகளுக்கு புறம்பாக சட்ட விரோதமாக மாறுதல் உத்தரவை தினமும் வழங்கி வருவது கண்டிக்கதக்கது. மாநிலம் முழுவதும் முறைகேடாக தொடக்க கல்வி துறையில் வழங்கப்பட்ட நிர்வாக மாறுதல்களை ரத்து செய்ய வேண்டும். இதன் மீதான விசாரணை மேற்கொண்டு தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடக்க கல்வி துறையில் பணி ஓய்வு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு விதிகளின் படி பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ