வாய்க்கால் பாலம் இடிந்தது
வாய்க்கால் பாலம் இடிந்ததுதாராபுரம், டிச. 22-தாராபுரத்தில், 50 ஆண்டு பழமையான வாய்க்கால் பாலம் இடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தாராபுரம் என்.என்.பேட்டை வீதியில், ராஜ வாய்க்கால் பாலம் உள்ளது. அரை நுாற்றாண்டு பழமையான இந்த வாய்க்கால் பாலம், சமீபகாலம் வரை மக்களுக்கு பயன்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று, பாலத்தின் வடபுற சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. நகராட்சி அதிகாரிகள் சேதமடைந்த பாலத்தை பார்வையிட்டனர். நடவடிக்கை எடுப்பதாக அப்பகுதி மக்களிடம் தெரிவித்தனர்.