கறுப்பு பேட்ச் அணிந்து பணிக்கு வந்த ஊழியர்
கறுப்பு பேட்ச் அணிந்துபணிக்கு வந்த ஊழியர்ஈரோடு, நவ. 16-தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி சுகாதார ஆய்வாளர் ரங்கராஜை, ஒப்பந்ததாரர் அசோக்குமார் தகாத வார்த்தை பேசி தாக்கியுள்ளார். இதை கண்டித்தும் ஒப்பந்ததாரர் மீது போலீசார் உரிய நடவடிக்கை கோரியும், தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கறுப்பு பேட்ச் அணிந்து நேற்று பணிக்கு சென்றனர். இதன்படி ஈரோடு மாநகராட்சியில் நான்கு மண்டல அலுவலகங்களில் பணிபுரிவோர், கறுப்பு பேட்ச் அணிந்து எதிர்ப்பை தெரிவித்தனர்.