மேலும் செய்திகள்
மாசு கட்டுப்பாடு அலுவலகம் திறப்பு விழா எப்போது?
10-Oct-2025
கோபி:அ.தி.மு.க., கட்சியில் இருந்தும் கோபி எம்எல்ஏ செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ள நிலையில், கோபி அருகே கரட்டூரில் உள்ள கோபி எம்.எல்.ஏ., தொகுதி அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று புதிய பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. பச்சை நிறத்தில் உள்ள பேனரில், இடதுபுறம் எம்.ஜி.ஆர்., படம் அருகில் செங்கோட்டையன் படம், நடுவில் அண்ணாதுரை படம், வலது புறம் ஜெயலலிதா மற்றும் இரட்டை இலை படம் உள்ளது. இதன் நடுவில் அ.தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என மட்டுமே அச்சிடப்பட்டிருந்தது. முன்னதாக இந்த அலுவலகம், புறநகர் மேற்கு மாவட்ட கட்சி அலுவலகம் மற்றும் கோபி சட்டசபை தொகுதி அலுவலகமாக இருந்தது. கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டதால் எம்.எல்.ஏ., அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது.
10-Oct-2025