மேலும் செய்திகள்
மானிய விலை நிலக்கடலை வெளிச்சந்தையில் விற்பனை
26-Jul-2025
கோபி, கவுந்தப்பாடி அருகே, 70 வயதில் சுவர் ஏறி குதித்து நிலக்கடலை மூட்டை திருடிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.கவுந்தப்பாடி அருகே சலங்கபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 46; அதே பகுதியில் எண்ணெய் உற்பத்தி செய்யும் ஆயில் கடை நடத்தி வருகிறார். கடந்த, 17ம் தேதி காலை கடையை திறந்து பார்த்தபோது, ஒரு நிலக்கடலை மூட்டை, டேபிள் டிராயரில் இருந்த, ௧,௦௦௦ ரூபாய் திருட்டு போயிருந்தது. அதிர்ச்சியடைந்த பிரகாஷ் கடையில் உள்ள 'சிசிடிவி' கேமராவை பார்த்தார். இதில், 16ம் தேதி நள்ளிரவு, 11:30 மணிக்கு, 70 வயது மதிக்கத்தக்க முதியவர், காம்பவுன்ட் சுவர் ஏறி குதித்து கடைக்குள் புகுந்து நிலக்கடலை மூட்டையை திருடி, சைக்கிளில் வைத்து தள்ளி செல்வது பதிவாகி இருந்தது. இதுகுறித்து பிரகாஷ் புகாரின்படி, அந்தியூரை சேர்ந்த பெருமாள், 70, என்பவரை கைது செய்துனர். நிலக்கடலை மூட்டை, பணத்தை கவுந்தப்பாடி போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.
26-Jul-2025