கொண்டாட்டத்தால் சாலைகள் வெறிச்
ஈரோடு, அஈரோடு மாநகரில் மேட்டூர் சாலை, எம்.எஸ்.சாலைகள், வழக்கமான தினங்களில் மக்கள் நடமாட்டம், 24 மணி நேரமும் இருக்கும். நேற்று முன்தினம் இரவு வரை எம்.எஸ்.சாலையில் உள்ள கடைகளில் தீபாவளியை ஒட்டி பொருட்களை வாங்க மக்கள் குவிந்தனர். தீபாவளி தினமான நேற்று வீடுகளில் பண்டிகையை கொண்டாடுவதில் மக்கள் கவனம் செலுத்தினர்.இதனால் சாலைகளில் கூட்டம் குறைந்தது. எம்.எஸ்.சாலையில் போக்குவரத்து வெகுவாக குறைந்து பல சமயங்களில் வெறிச்சோடி காணப்பட்டது. மேட்டூர் சாலையிலும் இதே நிலை நீடித்தது. அதேசமயம் கொங்காலம்மன் கோவில் வீதிகள், ஜின்னா வீதி, பொன் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி உள்ளிட்ட இடங்களில் கூட்டம் சொற்ப அளவில் இருந்தது. ஈரோடு பஸ் ஸ்டாண்டிலும் பயணிகள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. டவுன் பஸ்கள் நிற்கும் பகுதி, மினி பஸ்கள் நிற்கும் பகுதியில் சொற்ப எண்ணிக்கையில் மக்களை காண முடிந்தது.