உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இரண்டாம் கட்டமாக இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இரண்டாம் கட்டமாக இன்று ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஈரோடு: ஈரோட்டில், சாலை ஆக்கிரமிப்புகள் இரண்டாம் கட்டமாக இன்று முதல் அகற்றம் செய்யப்பட உள்ளது.ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலைகளில், ஆக்கிரமிப்புகளால் வாகன ஓட்டி-களும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வரு-கின்றனர். ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டி-கையை முன்னிட்டு மாநகரில் மக்கள் நடமாட்-டமும், போக்குவரத்தும் அதிகளவில் இருக்கும் என்பதால் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி கமிஷனர் மணீஷ் உத்தரவிட்டி-ருந்தார்.இதையடுத்து கடந்த மாதம், 20ம் தேதி பன்னீர் -செல்வம் பார்க் முதல் மணிக்கூண்டு, எல்லை மாரியம்மன் கோவில் வரை சாலை ஆக்கிரமிப்-புகள் அகற்றப்பட்டது. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக இன்று முதல் கருங்கல்பாளையம் காந்தி சிலை முதல் காளைமாட்டு சிலை வரையும், 4ம் தேதி பன்னீர்செல்வம் பார்க் முதல் மீனாட்சி சுந்தரனார் சாலையில் ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா வரையும், 5ம் தேதி ஈரோடு சத்தி சாலை ஸ்வஸ்திக் ரவுண்டானா முதல் ஈரோடு அரசு மருத்துவமனை வரையும் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது.இப்பணியில் மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை, வருவாய் துறை, மின்சார வாரியம், பேரிடர் மேலாண்மை, தொலைத்தொ-டர்பு துறை, சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை