உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 3 மொபட்டுகளை திருடியவர் கைது

3 மொபட்டுகளை திருடியவர் கைது

ஈரோடு:ஈரோடு கோட்டை காசியண்ணன் வீதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஆனந்தன், 45; ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே நிறுத்தப்பட்டிருந்த இவரின் மொபட் திருட்டு போனது. இதுகுறித்து சூரம்பட்டி போலீசில் புகார் செய்தார். இந்நிலையில் சூரம்பட்டி போலீசார், ரயில்வே ஸ்டேஷன் அருகே ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்ற, நாமக்கல் மாவட்டம் வெப்படை புதுகாலனியை சேர்ந்த மாதேஷை, 40, பிடித்து விசாரித்தனர். ஆனந்தன் உள்பட மூன்று பேரின் மொபட்டுகளை திருடியது தெரிய வந்தது. ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் நிற்கும் மொபட்டுகளை திருடி செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தது தெரியவந்தது. மாதேஷை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ