உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிவகிரியில் 2 கடைகளில் திருட்டு

சிவகிரியில் 2 கடைகளில் திருட்டு

ஈரோடு, சிவகிரி, விளக்கேத்தியை அடுத்த, பேயன்காட்டு வலசில், ஒரு காம்ப்ளக்சில் கோகுல்ராஜ், ஜெகதீஸ் ஆகியோர் உரக்கடை வைத்துள்ளனர். இதையடுத்து கிருத்திகா என்பவர் சொந்தமாக பூஜை பொருள் விற்பனை கடை நடத்துகிறார். நேற்று முன்தினம் இரு கடைகளிலும் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த ஆசாமிகள், 18 ஆயிரம் ரூபாயை திருடி சென்றுள்ளனர். நேற்று காலை கடை திறக்க வந்த கடைக்காரர்கள், திருட்டு நடந்ததை அறிந்து சிவகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கடந்த, 12ல் சிவகிரி, மோளபாளையத்தில் பட்டப்பகலில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு போனது. இந்நிலையில் அடுத்தடுத்த இரு கடைகளில் திருட்டு நடந்திருப்பது, மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை