மேலும் செய்திகள்
மாவட்டத்தில்5 இடங்களில் போலீஸ் பட்டாசு கடை
16-Oct-2025
ஈரோடு, ஈரோடு, சோலாரில் வெங்கடேஸ்வரா பிஸ்கட் பேக்கரி உள்ளது. கடைக்குள் நேற்று அதிகாலை கூரையை பிரித்து உள்ளே புகுந்து, 15 ஆயிரம் ரூபாயை திருடி சென்றுள்ளனர். கடையை ஒட்டிய மற்றொரு இரும்பு கடைக்குள் பணம் இல்லாததால் திரும்பி சென்றனர். பேக்கரி கடையில் 'சிசிடிவி' கேமரா உதிரி பாகத்தையும் திருடி சென்று விட்டதால் தடயம் கிடைக்கவில்லை. ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.இதேபோல் ஈரோடு-பெருந்துறை சாலையில், காலிங்கராயன் விருந்தினர் மாளிகை எதிரே, ஆர்கானிக் கடை கூரையை பிரித்து, 20 ஆயிரம் ரூபாயை திருடி சென்றுள்ளனர். ஈரோடு அரடு மருத்துவமனை போலீசார், ஆசாமியை தேடி வருகின்றனர்.
16-Oct-2025