62 அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லை கானல் நீராகும் மாணவர்களின் விளையாட்டு திறமை
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 62 அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்களின் விளை-யாட்டு திறன் பாதித்துள்ளது.பள்ளி, கல்லுாரி பருவத்தில் மாணவ, மாணவிகள் தங்கள் மன நலன் மட்டுமின்றி உடல் நலத்தையும் பேணி காக்க உடற்பயிற்சி, விளையாட்டு அவசியம். உடற்பயிற்சி, விளையாட்டில் ஈடுபடுவதால் உடல் வலிமை பெறுவதோடு மனநலமும் மேம்படுகிறது. எனவே பள்-ளிகளில் மாணவ, மாணவிகள் உடற்பயிற்சி, விளையாட்டுகளில் கவனம் செலுத்த நிபுணர்களும், அரசும் அறிவுறுத்தி வருகிறது.ஆனால் ஈரோடு மாவட்ட அரசு பள்ளிகளில் போதிய உடற்ப-யிற்சி, விளையாட்டு ஆசிரியர்கள் இல்லாதது கேள்விக்குறியாகி வருகிறது. விளையாட்டுகளில் திறன் இருந்தும் கண்டறிந்து ஊக்-குவிக்க ஆசிரியர்கள் இல்லாததால், விளையாட்டு கனவு கானல் நீராகி வருகிறது.ஈரோடு மாவட்டத்தில், 76 அரசு உயர்நிலை பள்ளி செயல்படுகி-றது. இதில், 51 பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லை. மொத்தமுள்ள, 113 மேல்நிலை பள்ளிகளில், 11 பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் காலியாகவே உள்ளது. பிறபா-டங்களுக்கு பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக ஆசிரியர்-களை நியமிப்பது போல் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படு-வதில்லை. துவக்க, நடுநிலை பள்ளிகளில் உடற்கல்விக்கு என ஆசிரியர்களே இல்லை. இதுதவிர பெரும்பாலான அரசு பள்ளி-களில் மாணவ,மாணவிகள் விளையாட மைதானம் இல்லை. மைதானம் இல்லாத நிலை, உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறை என பல்வேறு தடைகளை கடந்து அரசு பள்ளி மாணவ, மாண-விகள் விளையாட்டு போட்டிகளில் எவ்வாறு வெற்றியை பதிக்க முடியும்.ஆனால் தமிழக அரசும் ஆண்டுதோறும் விளையாட்டு போட்டி-களை பள்ளி அளவில் நடத்துகிறது. இவற்றில் மைதானம் இல்-லாத, உடற்கல்வி ஆசிரியர் வழிகாட்டுதல் இல்லாத மாணவ,மாணவிகளின் நிலை கேள்விக்குறியானதாகவே இருக்கி-றது.இதுபற்றி உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குனர் கழகத்தின் மாவட்ட தலைவர் சுரேஷ் கூறியதாவது:கடந்த சில ஆண்டுகளாகவே பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரி-யர்கள் நியமனம் இல்லை. தற்காலிக ஆசிரியர்களும் நியமிக்கவில்லை. அதேசமயம் பணி ஓய்வு, பணி-யிட மாற்றம் உள்ளிட்டவற்றால் காலி பணியிடம் அதிகரித்து வரு-கிறது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவ, மாணவிகள் இருந்தால் மட்டுமே, உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்ற நடைமுறை அமலாக உள்ளது. அவ்வாறின்றி மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப நியமிக்கவேண்டும். இவ்வாறு கூறினார்.