உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வங்கியில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு

வங்கியில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு

சென்னிமலை: சென்னிமலை, பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் வங்கியில் நேற்று மாலை, 4:30 மணியளவில் திடீரென அலாரம் ஒலித்துள்ளது. உடனே அக்கம் பக்கத்தினர், வங்கி பணியாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, பணியாளர் விரைந்து சென்று வங்கி கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது வங்கியில் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை என தெரியவந்தது.மின்சாதனத்தின் மீது, பல்லி விழுந்திருக்கும்; அதனால் அலாரம் ஒலித்திருக்கலாம் என தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !