மேலும் செய்திகள்
திருட வந்து கிணற்றில் விழுந்த நபர்
02-Nov-2024
கிணற்றில் விழுந்த திருடன்குணமடைந்ததால் சிறைகாங்கேயம், நவ. 5-காங்கேயம் அருகேயுள்ள தளஞ்சிக்காட்டுப்புதுாரை சேர்ந்தவர் சுப்புகுட்டி, 60; கடந்த, 30ம் தேதி நள்ளிரவில் வீட்டில் துாங்கி கொண்டிருந்தார்.அப்போது நாய் குரைக்கும் சத்தம் கேட்டு எழுந்தார். ஒரு மர்ம ஆசாமி கதவை திறந்து கொண்டிருந்தான். அவர் சத்தமிடவே அக்கம்பகத்தினர் வந்ததால், ஆசாமி ஓட்டம் பிடித்தான்.மறுநாள் காலை அருகிலிருந்த கிணற்றிலிருந்து சத்தம் வந்ததால், காங்கேயம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்று பார்த்தபோது, ஒருவர் கிணற்றில் தத்தளித்தது தெரிய வந்தது. மீட்டு வந்து விசாரித்தபோது நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல், 46, என்பதும், சுப்புகுட்டி வீட்டில் திருட முயன்று, தப்பி ஓடியபோது, கிணற்றில் விழுந்ததும் தெரிய வந்தது. கைது செய்த நிலையில், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.கடந்த நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், போலீசார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை சிறையில் அடைத்தனர்.
02-Nov-2024