மேலும் செய்திகள்
ஊட்டி தாவரவியல் பூங்காவில் திருவள்ளுவர் சிலை
31-Dec-2024
ஈரோடு, ஜன. ௩-கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவியதன், 25ம் -ஆண்டு நிறைவை முன்னிட்டு ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் சிலைகளுக்கு, கல்லுாரி முதல்வர் சங்கரசுப்ரமணியன், இயக்குனர் வெங்கடாசலம் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு நெறியாளர் வெங்கடாசலம் ஆகியோர் மாலை அணிவித்தனர். பிறகு ஆங்கில புத்தாண்டை ஒட்டி கல்லுாரி மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கொண்டாட்டத்தின் நிறைவாக கேக் வெட்டி ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
31-Dec-2024