உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாலிபரை தாக்கி பணம் பறித்த மூன்று பேர் கைது

வாலிபரை தாக்கி பணம் பறித்த மூன்று பேர் கைது

பெருந்துறை: கரூர் மாவட்டம் நொய்யல், அண்ணா நகரை சேர்ந்தவர் ஜெக-தீசன், 30; பெருந்துறையில் ஒரு தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆப்பரேட்டராக தங்கி பணி செய்கிறார். மனைவியை பிரிந்தவர். வாட்ஸ் ஆப் மூலம் பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதாக கூறி மர்ம ஆசாமி அழைத்துள்ளார். அதை நம்பி சென்றபோது, மூன்று பேர் கும்பல் அவரை தாக்கி பணத்தை பறித்து சென்றனர். இது தொடர்பான புகாரின்படி காஞ்சிக்கோவில் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் கோவை, ரத்தினபுரி, சாஸ்திரி நகர் சஞ்சய் கிஷோர், 21; ஈரோடு, மரப்பாலம், அந்தோணியார் வீதி நிஹாத், 22; மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர். மூவ-ரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சிறுவனை கூர்நோக்கு இல்லத்திலும், மற்ற இருவரையும் மாவட்ட சிறையிலும் அடைத்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை