போதை மாத்திரைகள் வைத்திருந்த மூவர் கைது
ஈரோடு: வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரையாக பயன்படுத்திய, ஈரோடு, ஆணைக்கல்பாளையம், ரகுபதி நாயக்கன்பாளையம் சந்திரசேகரன் மகன் பிரதாப், 21; ஈரோடு, சாஸ்திரி நகர் விநாயகர் கோவில் வீதி கந்தசாமி மகன் வைரவேல், 22; ஈரோடு, பெரியார் நகர் ராஜா மகன் சாம்சுந்தர், 23, ஆகியோரை, சூரம்பட்டி போலீசார் கைது செய்தனர். இதில் பிரதாப் மீது ஐந்து வழக்குகளும், வைரவேல் மீது நான்கு வழக்கும், சாம் சுந்தர் மீது இரு வழக்கும் உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.