உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போதையில் தகராறு மூன்று பேர் கைது

போதையில் தகராறு மூன்று பேர் கைது

தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த அலங்கியத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணியளவில், செவிலியர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த போதை ஆசாமிகள் மூவர், தகாத வார்த்தைகளை பேசி, தகராறு செய்தனர். மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அளித்த புகாரின்படி, போதையில் தகராறு செய்த தளவாய் பட்டினம் கிழக்கு தெருவை சேர்ந்த சங்கர், 33, ராமு, 22, அரவிந்த், 25, ஆகியோரை அலங்கியம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை