உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மொபட் திருடிய பழங்குற்றவாளி உள்பட மூவர் கைது

மொபட் திருடிய பழங்குற்றவாளி உள்பட மூவர் கைது

ஈரோடு,ஈரோடு, சக்தி நகர், ராசாம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரசேகர், 24; வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த இவரது மொபட் கடந்த, ௩ம் தேதி இரவு திருட்டு போனது. புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார், களவாணிகளை தேடி வந்தனர்.இந்நிலையில் வீரப்பன்சத்திரம், இ.பி.பி.நகர் சந்தோஷ்குமார், 24; வீரப்பன்சத்திரம், மாணிக்கம்பாளையம் பூலான்காடு சக்தி நகர் கலையரசன், 18; சூளையை சேர்ந்த, 17 வயது சிறுவன் ஆகியோர் மொபட் திருடியது தெரியவந்தது. மூவரையும் கைது செய்தனர்.இதில் சந்தோஷ்குமார் மீது நாமக்கல், பெருந்துறை, வீரப்பன்சத்திரம் போலீசில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ