உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பட்டப்பகலில் ஜோராக நடந்த மர கடத்தல்; உறக்கத்தில் நீர்வளத்துறை அதிகாரிகள்

பட்டப்பகலில் ஜோராக நடந்த மர கடத்தல்; உறக்கத்தில் நீர்வளத்துறை அதிகாரிகள்

தாராபுரம்: தாராபுரத்தில் பூளவாடி சாலையில், மில் மேடு பகுதியில் இருந்து சகுனிபாளையம் செல்லும் உப்பாறு பாசன வாய்க்காலின் இருபுறமும் மரங்கள் இருந்தன. கடந்த மூன்று நாட்களாக இந்த மரங்கள் வெட்டப்பட்டு வந்தன. சந்தேகம-டைந்த மக்கள் மரத்தை வெட்டும் தொழிலாளர்க-ளிடம், நேற்று விசாரித்தனர். இதனால் அவர்கள் மரம் வெட்டுவதை நிறுத்திவிட்டு வாகனத்தில் ஏறி சென்றனர். சந்தேகம் வலுக்கவே உப்பாறு அணை நீர்வளத்துறை பொறியாளர் விஜயசேக-ருக்கு தகவல் அளித்தனர். இது தொடர்பாக அவ-ரிடம் கேட்டபோது, 'மரம் வெட்டிய நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க, தாராபுரம் போலீசில் புகார் அளித்துள்ளேன்' என்று தெரி-வித்தார். அரசுக்கு சொந்தமான மரங்கள், பட்டப்ப-கலில் வெட்டப்பட்டு, லோடு, லோடாக கடத்தப்-பட்டும், அதிகாரிகள் அலட்சியமாக இருந்தது, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி