உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

டி.என்.பாளையம், டி.என்.பாளையம் அருகே உள்ள பங்களாபுதூரில் சட்டவிரோதமாக மண் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, ஈரோடு மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் கவிதா, தனி வருவாய் ஆய்வாளர் ரவிக்குமார் ஆகியோர், பங்களாபுதுார் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது வந்த ஒரு டிப்பர் லாரியில் கிராவல் மண் இருந்தது. ஆனால், உரிய ஆவணம் இல்லை. லாரியை பறிமுதல் செய்தனர். விசாரணையில் லாரி உரிமையாளர் புதுவள்ளியாம்பாளையத்தை சேர்ந்த பாலு 50; லாரி டிரைவர், கொண்டையம்பாளையம், இந்திராநகர் புதுகாலனியை சேர்ந்த விஜயன், 29, என தெரிந்தது. இருவர் மீதும் பங்களாபுதுார் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ