இன்று 2வது நாளாக வேட்பு மனுத்தாக்கல்
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனுத்தாக்கல் கடந்த, 10ல் தொடங்கியது. 17ம் தேதி வரை மனு செய்யலாம். பொங்கல் விடுமுறையால், கடந்த, 10, இன்று, 17ம் தேதி என மூன்று நாட்கள் மட்டுமே மனுத்தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. கடந்த, 10ல் நடந்த வேட்பு மனுத்தாக்கலில், 3 சுயேட்சைகள் மனுத்தாக்கல் செய்தனர். இரண்டாவது நாளாக வேட்பு மனுத்-தாக்கல், மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடக்க உள்ளது. அ.தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ஜ., போட்டி யிடாததால், தி.மு.க., உட்பட சில கட்சிகள், சுயேட்சைகள் மட்டுமே வேட்பு மனுத்தாக்கலுக்கு வாய்ப்புள்ளது.