மேலும் செய்திகள்
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கண்டனம்
22-Nov-2024
ஈரோடு, டிச. 18-ஈரோட்டில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 21ல் நடக்கும் மாவட்ட அளவிலான திருக்குறள் வினாடி--வினா போட்டியில் பங்கேற்க, விண்ணப்பிக்க இன்று(18) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில், அரசு சார்பில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு அரசு ஊழியர்கள் மற்றும் அனைத்து வகையான பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு திருக்குறள் வினாடி--வினா போட்டி நடத்தப்பட உள்ளது. இதில், ஈரோடு மாவட்டத்திற்கான போட்டி வரும் 21, ஈரோடு காந்திஜி சாலை அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மதியம் 2:00 மணிக்கு நடத்தப்பட உள்ளது.போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், அனைத்து வகையான அரசு ஊழியர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.போட்டியில் பங்கேற்பவர்கள், விண்ணப்பத்தை தாங்கள் பணியாற்றும் பள்ளி மற்றும் துறைகளின் சார்பாக பள்ளிக்கல்வித்துறைக்கு விண்ணப்பிக்க இன்று (18) கடைசி நாள்.இத்தகவலை பள்ளிக்கல்வித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
22-Nov-2024