உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எகிறியது தக்காளி விலை

எகிறியது தக்காளி விலை

ஈரோடு, தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திராவிலும் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் காய்கறி வரத்து குறைந்து விலை உயர துவங்கியுள்ளது. ஈரோடு மார்க்கெட்டில் கடந்த, 22ம் தேதி வரை ஒரு கிலோ தக்காளி, 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை சில்லரை விலையில் விற்கப்பட்டது. வரத்து குறைந்ததால் நேற்று ஒரே நாளில், 50 ரூபாயாக உயர்ந்தது. மழையால் விளைச்சல் பாதித்து வரத்து குறைந்ததே காரணண் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !