கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடைகோபி, அக். 25-பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கொடிவேரி தடுப்பணைக்குள் சுற்றுலா பயணிகள் நுழையவும், குளிக்கவும் நேற்று தடை விதிக்கப்பட்டது.ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது. குளிக்கும் வசதி எளிது என்பதால், அங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். இந்நிலையில் கொடிவேரியில் நேற்று முன்தினம் இரவு, 13 மி.மீ., மழை, சத்தியில், 51 மி.மீ., நம்பியூரில், 3 மி.மீ., மழை பெய்தது.இதனால் கொடிவேரி தடுப்பணை வழியாக, நேற்று காலை, 6:00 மணிக்கு வினாடிக்கு, 866 கன அடி மழை நீர் வெளியேறிதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கொடிவேரி தடுப்பணைக்கு, சுற்றுலா பயணிகள் நுழையவும், குளிக்கவும் நீர்வள ஆதாரத்துறையினர் நேற்று தடை விதித்தனர். அதேபோல் இன்றும் (அக்.,25ல்) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், தடுப்பணைக்குள் சுற்றுலா பயணிகள் நுழைவதில் தடை தொடரும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.