உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உப்பு - மிளகு விற்கும் கட்டில் கடைக்கு பண்ணாரி கோவிலில் ரூ.௧ லட்சம் வியாபாரிகள் சலுகை கோரி மனு

உப்பு - மிளகு விற்கும் கட்டில் கடைக்கு பண்ணாரி கோவிலில் ரூ.௧ லட்சம் வியாபாரிகள் சலுகை கோரி மனு

ஈரோடு: பவானி உட்பட பல்வேறு பகுதியை சேர்ந்த கற்பூர கடை வியாபாரிகள் அமைப்பு சார்பில், ஈரோடு டி.ஆர்.ஓ., சாந்தகுமா-ரிடம் மனு வழங்கி கூறியதாவது: பல்வேறு பகுதியை சேர்ந்த நாங்கள் பெரிய கோவில் திருவிழாக்களில் தற்காலிக கடை அமைத்து செயல்படுகிறோம். நாங்கள், 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் அமைப்பாக உள்ளோம்.கோவில் திருவிழாக்களில் கற்பூரம், உப்பு - மிளகு, தேங்காய் - பழம் - வெற்றிலை பாக்கு தட்டு விற்பனை, பொறி, பானிப்பூரி, சிறிய உணவு பொருட்கள் விற்கிறோம். பண்ணாரி கோவிலில் குண்டம் விழாவுக்கு, 15 நாட்கள் கடை போடுவோம். முன்பு, 150 ரூபாய்க்கு அனுமதி பெற்று கடை அமைத்தோம். தற்போது, 1,100 கடை வரை அமைக்கின்றனர். பொறிக்கடைக்கு, 2 லட்சம் ரூபாய், கற்பூர கடைக்கு, 50,000 ரூபாய், கட்டிலில் வைத்து உப்பு - மிளகு விற்க, 1 லட்சம் ரூபாய் என கடும் விலை வைத்துள்-ளனர். எங்களின் வாழ்வாதரமாக இதுபோன்ற விழாவில் கடை போடுவது உள்ளதால், மாவட்ட நிர்வாகம் குறைந்த கட்டணம் நிர்ணயித்து கடை அமைக்க அனுமதிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை