உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம்: கடம்பூர் வனத்துறை அலுவலகம் முன் பகுதி அருகே, சாலையோரமிருந்த பட்டுப்போன மலைவேம்பு மரம் நேற்று மாலை, 6:10 மணிக்கு முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. அப்போது அந்த வழியாக டூவீலர்கள் மட்டுமே தடுமாறி சென்றது. கரும்பு லாரி, மினி ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் வாகனங்கள் நின்றது. கடம்பூர் போலீசார், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் பொக்லைன் மூலம், 7:00 மணிக்கு மரத்தை அப்புறப்படுத்தினர். பின்பு போக்குவரத்து சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ