உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சத்துணவு பணியாளர்களுக்கு பயிற்சி

சத்துணவு பணியாளர்களுக்கு பயிற்சி

ஈரோடு: ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை சார்பில், எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்க-ளுக்கான, உணவு பாதுகாப்பு மற்றும் சான்றிதழ் விழிப்புணர்வு பயிற்சி மாநகராட்சி கூட்டரங்கில் நேற்று நடந்தது.கலெக்டர் நேர்முக உதவியாளர் (சத்துணவு) உமா தலைமை வகித்தார். தனியார் நிர்வாகத்தை சேர்ந்த கார்த்தி பயிற்சி அளித்தார். கூட்டத்தில் தன் சுத்தம், இடம் சுத்தம், பொருட்கள் மேலாண்மை, உற்பத்தி கட்டுப்பாடு, பூச்சி கட்டுப்பாடு, பயிற்சி மற்றும் பரிசோதனை போன்ற 7 தலைப்புகளின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டது. மொடக்குறிச்சி, கொடுமுடி, ஈரோடு மாநக-ராட்சி பகுதிகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட சத்துணவு கூட அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை