உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

ஈரோடு, அரசு நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு செயல்படுகிறது. இதில் ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும், 61 பள்ளிகளின் மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு, நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. ஈரோட்டில் ஈரோடு ப.செ.பார்க் அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளி உள்பட மாவட்டத்தில், 15 பள்ளிகளில் முகாம் நடந்தது. இவர்களுக்கு மாணவர் கற்றலை மேம்படுத்துதல், கற்றல் அடைவை மேம்படுத்துவது, பள்ளி உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. பள்ளி மேலாண்மை குழு மேற்பார்வையாளர் மயில்சாமி தலைமை வகித்தார். ஆசிரிய பயிற்றுனர் சுகன்யா, பயிற்சியை ஒருங்கிணைத்தார்.மாநில கருத்தாளர் மாறன், கோவை மாவட்ட கருத்தாளர் கோகிலா, ஈரோடு கருத்தாளர் சந்திரன் ஆகியோர் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டிய ஆக்கபூர்வ பணிகள் குறித்து விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை