மேலும் செய்திகள்
ஓட்டு எண்ணும் மையத்தில் ஆய்வு
25-Jan-2025
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை, 8:00 மணிக்கு துவங்கி நடக்க உள்ளது. 14 மேஜை-களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரமும், 1 மேஜையில் தபால் ஓட்டும், மற்றொரு மேஜையில், வி.வி.பேட் ஓட்டும் எண்-ணப்படும். ஒரு மேஜைக்கு தலா ஒரு கண்காணிப்பாளர், ஒரு உத-வியாளர், ஒரு நுண் பார்வையாளர் என, கூடுதல் நபர்கள் சேர்த்து, 51 பேர் நியமிக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டது. ஓட்டு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த், பயிற்சி வழங்கும் அலுவ-லர்கள் பயிற்சி வழங்கினர். இவர்களுக்கு தேர்தல் ஆணைய இணைய தளத்தில் சுழற்சி செய்து பணியாணை வழங்கப்பட்டது.
25-Jan-2025