டி.என்.பாளையம் பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை மரங்கள் விழுந்து அறுபட்ட மின் கம்பிகள்
டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் சுற்று வட்டார பகுதிகளான கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், கொண்டையம் பாளையம், பங்களாபுதுார், வாணிப்புத்துார், டி.என்.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று காலை முதல் வழக்கம்போல் வெயில் வாட்டியது. இந்நி-லையில் மாலை, 4:00 மணி அளவில் பலத்த சூறாவளிக்காற்று வீசியது.இதை தொடர்ந்து மிதமான சாரல் மழை பெய்தது. வாணிப்புத்-துார்-கெங்கர்பாளையம் சாலையில் அரசமரம் மரம் வேருடன் சாய்ந்ததில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. மரக்கிளை பட்டதில் அறுந்த மின் கம்பிகளை, மின்வாரிய ஊழியர்கள் சரி செய்தனர்.அரச மரத்தை தாக்கிய இடி நம்பியூர், பட்டிமனிக்காரன் பாளையம், மீன்காரம்பாளையம், வேமாண்டபாளையம், குட்டகம், சூரிபாளையம், பொலவபா-ளையம் பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்று வீசியது. அதை தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. பட்டிமணியக்காரம் பாளையம், சின்னியந்தோட்டம் பகுதியில் அரசமரத்தில் இடி விழுந்ததில் தீப்பற்றி எரிந்தது. நம்-பியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர்.சாய்ந்த தென்னை மரம் கோபியில் சத்தி சாலையில், மங்களபுரம் பகுதியில், நேற்று மாலை 4:30 மணிக்கு, பலத்த காற்றுடன், சாரல் மழை பெய்தது. அப்போது தென்னை மரம் மின்பாதையில் விழுந்ததில், மின் கம்பம் பிரதான சத்தி சாலையில் சாய்ந்தது. மின்வாரிய பணியாளர்கள் மின் இணைப்பை துண்டித்து, சீர-மைக்கும் பணியில் ஈடுபட்டனர். அரசூர்புதுார் மின் வாரிய பிரிவு அலுவலக மேற்கூரை மீது பொருத்தியிருந்த இரும்பு டவர் முறிந்து, மரத்தின் மீது விழுந்தது. காசியூரில் இருந்து பிள்-ளையார் கோவில் துறை செல்லும் சாலையில், பலத்த காற்றால் தென்னை மரம் சாய்ந்து விழுந்ததில், மின்கம்பம் முறிந்தது. ஆலங்கட்டி மழை சத்தியமங்கலத்தை அடுத்த கே.என்.பாளையம், தாசரிபாளையம் பகுதிகளில் நேற்று மதியம், 3:00 மணி முதல், 4:00 மணி வரை சூறாவளிக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. தாசரிபாளையம் பகுதியில் சூறாவளிக்காற்றால் ஆறுமுகம், வெள்-ளியங்கிரி வீட்டு முன்பிருந்த வேப்ப மரம் முறிந்து வீட்டின் கூரை மீது விழுந்ததில் சேதமடைந்தது.