உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பைக் திருடிய ஈரோட்டில் பழங்குற்றவாளி கைது

பைக் திருடிய ஈரோட்டில் பழங்குற்றவாளி கைது

ஈரோடு, ஈரோட்டில் பைக் திருடிய, வேலுாரை சேர்ந்த பழங்குற்றவாளி கைது செய்யப்பட்டார். ஈரோடு மூலப்பாளையம் குறிக்காரன் பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் மூர்த்தி, 47. டாஸ்மாக் ஊழியர். கடந்த 27ல் காந்திஜி சாலை ஜவான்பவன் முன் தனது ஹீரோ ஹோண்டா பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது பைக் மாயமானது.சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், பைக்கை திருடிய வேலுார் பிள்ளைய குப்பத்தை சேர்ந்த சரவணன் மகன் தமிழரசன், 26, என தெரியவந்தது. கடந்த 2 மாதங்களாக ஜவான்பவன் அருகே புதுமை காலனியில் தங்கி இருந்தார். காந்திஜி சாலை தீயணைப்பு நிலையம் அருகேயுள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பைக் மீட்கப்பட்டது. தமிழரசன் மீது வேலுாரில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், ஐந்து குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை