உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நா.மகாலிங்கத்துக்கு நினைவஞ்சலி

நா.மகாலிங்கத்துக்கு நினைவஞ்சலி

பவானி, பவானி அருகே ஆப்பக்கூடல் சக்தி நகரில், சக்தி சர்க்கரை ஆலை நிறுவனம் உள்ளது. இதன் நிறுவனர் பொள்ளாச்சி நா.மகாலிங்கத்தின், 11வது நினைவேந்தல் நிகழ்ச்சி ஆலையில் நடந்தது. அவரது உருவப்படத்துக்கு ஆலை உபதலைவர் திருவேங்கடம் மலர் துாவி அஞ்சலி செலுத்தினார். இதை தொடர்ந்து ஆப்பக்கூடல் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள், முக்கிய பிரமுகர்கள், ஆலை ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர். ஆப்பக்கூடலில், 2,௦௦௦க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிர்வாக துணை பொது மேலாளர் மோகன்குமார் செய்திருந்தார். ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலை நிறுவனர் மகாலிங்கத்தின், 11வது நினைவேந்தல் நிகழ்ச்சியில், ஆலை உப தலைவர் திருவேங்கடம், அஞ்சலி செலுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை