மேலும் செய்திகள்
தொடர் மழையால் மஞ்சள் விலை சரிந்தது
25-May-2025
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில், மஞ்சள் விலை உயர்வால் சாகுபடி பரப்பு அதிகரித்துஉள்ளது.தமிழகத்தில், ஈரோடு மஞ்சளுக்கு தனி வரவேற்புண்டு. பல ஆண்டுகளுக்கு பின் 2024ல், குவின்டால் மஞ்சள் 21,000 ரூபாயை கடந்தது. தற்போது, 12,000 முதல் 15,000 ரூபாய் வரை விலை போகிறது.தோட்டக்கலை துறை அலுவலர்கள் கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, மொடக்குறிச்சி, அந்தியூர், பவானி தாலுகாவில் அதிக அளவிலும், சத்தி உட்பட சில தாலுகாவில் குறைந்த அளவிலும், மஞ்சள் சாகுபடியாகிறது.வழக்கமாக, 5,000 முதல் 6,000 ஏக்கர் வரை சாகுபடியாகும். கடந்தாண்டு கிடைத்த விலை உயர்வால், நடப்பாண்டில், 8,000 முதல், 9,000 ஏக்கருக்கு மேல் பரப்பு அதிகரித்துள்ளது.பவானிசாகர் அணையில் தண்ணீர் உள்ளதாலும், கிணற்று பாசனத்தில் சொட்டுநீர் பாசன அமைப்பு ஏற்படுத்தி, அதிகம் சாகுபடி செய்கின்றனர். சொட்டுநீர் பாசன அமைப்பால், நீர் தேவை குறைவு. விளைச்சலும் நன்றாக இருக்கும் என்பதால், விவசாயிகள் ஆர்வம் காட்டி உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.அதே சமயம் மரவள்ளி, காய்கறிக்கு சரியான விலை இல்லை. 1 டன் மரவள்ளி கிழங்கு தற்போது, 4,500 ரூபாய்க்கே விற்கிறது. அதே நேரம் மஞ்சளுக்கு, 12,000 முதல் 15,000 ரூபாய் வரை குவின்டாலுக்கு விலை கிடைக்கிறது. இதில், பெரிய லாபம் கிடைக்காவிட்டாலும், நஷ்டம் ஏற்படாது. இதனால், நிறைய விவசாயிகள் நடப்பாண்டு மஞ்சள் சாகுபடிக்கு திரும்பியுள்ளனர். இதனால், சாகுபடி பரப்பு அதிகரித்து உள்ளது.
25-May-2025