உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / லஞ்சம் பெற்ற மின் ஊழியர்கள் இருவர் கைது

லஞ்சம் பெற்ற மின் ஊழியர்கள் இருவர் கைது

சத்தியமங்கலம்:ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, ராமபையலுாரை சேர்ந்தவர் அருள் பாரதி. தன் தோட்டத்தில் உள்ள வீட்டுக்கு மின் இணைப்பு பெற, சிக்கரசம்பாளையம் துணை மின் நிலையத்தில் விண்ணப்பித்தார்.போர்மேன் சண்முகம், லைன்மேன் பாலசுப்ரமணியன் ஆகியோர், 6,000 ரூபாய் லஞ்சம் கேட்டனர். தர விரும்பாத அருள்பாரதி, ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.அவர்கள் அறிவுரைப்படி, இருவரிடமும் பணத்தை கொடுத்த போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், இருவரையும் கையும், களவுமாக பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ellar
ஜன 08, 2024 17:35

தனியார் துறை வேலை, முறைசாரா பணிகளில் எண்ணற்றோர் விடுவதை பார்த்து அரசுப் பணியுள்ளோர் கடவுளுக்கு நன்றி கூறி நியாயமாக உழைத்தால் தலைமுறை சிறக்கும். அக்காலத்தில் சிவன் ( அரசு) சொத்து குல நாசம் என்றது உண்மைதானே


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை