உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாலிபரிடம் மொபைல் பறித்த இருவருக்கு சிறை

வாலிபரிடம் மொபைல் பறித்த இருவருக்கு சிறை

ஈரோடு, ஈரோடு, மூலப்பட்டறை பகுதியில், தனியார் நிறுவன ஊழியரான கணேசன், 37, மொபைல்போன் பேசியபடி இரவில் நடந்து சென்றார்.அப்போது மொபட்டில் வந்த இருவர், மொபைல்போனை பறித்து சென்றனர். அவர் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார், 'சிசிடிவி' கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரித்தனர். இதில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், ரவி மகன் சரவணகுமார், 21; ஈரோடு, அக்ரஹாரம், மினியப்பன் கோவில் வீதியை சேர்ந்த சிவக்குமார் மகன் மணிகண்டன், 22, ஆகியோரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ