மேலும் செய்திகள்
டூவீலர் மெக்கானிக் இலவச பயிற்சி
22-Jul-2025
திருப்பூர், மத்திய அரசு மற்றும் கனரா வங்கி சான்றிதழுடன் கூடிய, 'டூ வீலர் 'பழுது நீக்கும் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து கனரா வங்கி ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குனர் சதீஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: ஊரக பகுதி மக்களுக்கு, திருப்பூர் முதலிபாளையம் பிரிவு, வஞ்சியம்மன் கோவில் அருகே இயங்கும் கனரா வங்கி வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில், இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி 'டூ வீலர்' பழுதுநீக்கும் பயிற்சி 30 நாட்கள் நடக்க உள்ளது. எழுத படிக்க தெரிந்த, 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட இருபாலரும் விண்ணப்பிக்கலாம். தொழில் துவங்க உரிய வங்கிக்கடன் குறித்த ஆலோசனை வழங்கப்படும். விவரங்களுக்கு, 90804 42586, 99525 18441 என்ற எண்களில் அணுகலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
22-Jul-2025