மேலும் செய்திகள்
வலி நிவாரணி மாத்திரை: 4 பேர் கைது
21-May-2025
ஈரோடு, போதை மாத்திரை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்படி, வீரப்பன்சத்திரம் எஸ்.ஐ., சபியுல்லா தலைமையிலான போலீசார், பெரியவலசு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற இருவரை பிடித்து விசாரித்தனர். அந்தியூர், குந்துபாரியூர் முபாரக் அலி மகன் கொபர் அலி, 19; பெரியவலசு, முத்துமாரியம்மன் கோவில் பகுதி நாகராஜ் மகன் பிரவீன், 19, என தெரிந்தது. வலி நிவாரண மாத்திரை எனக்கூறி போதை மாத்திரைகளை விற்றது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, 10 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
21-May-2025