உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உதயநிதி பிறந்தநாள் விழா திருப்பூர் மா.செ., அறிவிப்பு

உதயநிதி பிறந்தநாள் விழா திருப்பூர் மா.செ., அறிவிப்பு

உதயநிதி பிறந்தநாள் விழாதிருப்பூர் மா.செ., அறிவிப்புகாங்கேயம், நவ. 27-துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழாவை, நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட, திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: துணை முதல்வர், இளைஞரணி செயலாளர் உதயநிதி, 47 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது. திருப்பூர் தெற்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர், வார்டு கழக, கிளை மற்றும் சார்பு அணி அமைப்புகளில், கட்சி கொடியேற்றியும், இனிப்பு வழங்கியும், ஆதவரவற்ற இல்லங்களில் உணவு வழங்கியும், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கியும் கொண்டாட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி